Monday, September 15, 2014

தீபாவளி கவிதைப்போட்டி 2014


உன்மத்த சிறுக்கியவள்

 

ஒய்யார அழகியே

உன்மத்த சிறுக்கியே

கண்டாங்கி புடவைகட்டி

எனை களவு கொண்டவளே

ஓரக்கண் பார்வையால

உயிருக்குள் உறைஞ்சவளே

 

உன் வனப்ப பார்த்துவிட்டால்

கற்சிலையும் சிலாக்கிகுமடி

உன் கண்ணழகை கண்டுவிட்டால்

கயல்கூட நாணுமடி

 

நீ வச்ச பூவுக்கு

விலைமதிப்பே இல்லையடி

நீ தீண்டாத பூவெல்லாம்

தற்கொலைக்கு துடிக்குதடி

 

நீ தொடுத்த பூச்சரங்கள்

சாகாவரம் பெற்றதடி

உன் கை பட்டதால

கதவு கம்பி நெகிழுதடி

 

கட்டுப்பாட்ட இழந்த குதிரையாட்டம்

மனசு கண்டபடி கற்பனையில் குதிக்குதடி

இதுவரைக்கும் கஷ்டப்பட்டு கட்டிக்காத்த

என் கற்புநெறி தகருதடி

 

காதலோடு உனைபார்த்தால்

ஆயிரமாயிரம் கவிதை கொட்டும்

திரையில் நீ தோன்றினால் போதும்

அழகுக்கென்று ஒர் ஆஸ்கார் விருது

உன் வீட்டு கதவை தட்டும்

 

கடவுள் என் எதிரில் வந்தால்

உன் கொண்டையில ஒரு பூவாகவோ

கொசுவலத்துல ஒரு மடிப்பாகவோ

காது லோலாக்கில ஒரு மணியாகவோ

உடனே மாற வரம் கேட்பேன்

தர மறுத்தால்

வாளெடுத்து அவனோட மல்லுக்கு நிற்பேன்..

5 comments:

  1. கிராமிய நடைபோட்டு அழகியல் வீதியில் பயணிக்கும் கவிதை அருமை நண்பா... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தமிழன்னையின் பாலருந்தி வளர்ந்தவனே

    அவளின் தாலாட்டில் உளமகிழ்ந்து உறங்கியவனே

    உன் தமிழ் மழையின் இச்சிறு துளியே

    தமிழ் மண்ணின் மணத்தை இப்புவியில்

    பரப்பியது என்றால்........................!!!??

    ReplyDelete
  3. வணக்கம்
    தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்
    கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தங்களின் விபரங்களை அனுப்பிவைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன். மேலும் விபரம் பார்வையிட இதோ முகவரி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய ...: ரூபன்& யாழ்பாவாணன்  இணைந்து நடத்திய  உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அன்பு நண்பரே!

    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete