Monday, September 15, 2014

சிதையும் சமூகம்


கான்கிரீட் காடுகளாய்

பரந்து விரிந்து கொண்டிருக்கும்

பெருநகரங்களினூடே

சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது

கொஞ்சூண்டு மிச்சமிருக்கும்

செழுமையும் பசுமையும்...

 

பணத்திற்கும் பதவிக்கும்

பேயாய் பறக்கும் சில நபர்களிடம்

பொருளிழந்த வார்த்தைகளாய்

வலம் வருகின்றன

பகுத்தறிவும் சுயமரியாதையும்...

 

உடலிச்சைக்கு

இளந்தளிர்களை உருகுலைக்கும்

கயவர்களின் செயலால்

கல்லறைக்கு செல்கின்றன

நாகரீகமும் பண்பாடும்...

 

உயிர் வாழ்தல் பொருட்டு

எதிரியின் கால்நக்கும்

நயவஞ்சக கருநாக்குகளால்

வீழ்ந்து கிடக்கின்றன

வீரமும் விவேகமும்

 

தான்தோன்றித்தனமாய்

தலைஅறுபட்ட கோழியாய்

தறிகெட்டு ஓடும் இச்சமுதாயத்தில்

ஒரு கவிதை அழுகிறது

அருகிப்போன மனிதத்தன்மைக்கும்

கருகிப்போன தென்றலுக்குமாய்...

2 comments:

  1. நிதர்சனத்தை படம்பிடிக்கும் அழகிய கவிதை படைத்த நண்பனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

    ReplyDelete
  2. வணக்கம்
    தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

    இப்படி தலைப்பிடவும்...
    தீபாவளித் திருநாளை முன்னிட்டு
    ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
    உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014



    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete